உள்ளூர் செய்திகள்

இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

கரூர்: மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க மே 31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு சார்பில், மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதில், ஒரு லட்சம் ரூபாய்- ரொக்கம், பதக்கம் வழங்கப்படும். 15 வயது முதல், 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.விருதிற்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்த பட்சம், 5 ஆண்டு தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவர்கள் செய்த தொண்டு கண்டறிப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க வரும் மே 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்