ஐ.ஐ.எம்.-கே முதுகலை படிப்பில் 35% பெண்கள்
அதாவது முதுகலை பட்டப்படிப்பில் உள்ள 341 சேர்க்கை இடங்களில் 121 இடங்களில் பெண்களுக்கு அனுமதி அளித்துள்ளது. கடந்த ஆண்டு பெண்களுக்கு 30 விழுக்காடு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஐ.ஐ.எம்.-கோழிக்கோடு பின்பற்றும் வழிமுறையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சேர்க்கை முறைதான் முக்கியமானது என்று மைய இயக்குநர் தேபாஷிஸ் சாட்டர்ஜி தெரிவித்தார். இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஐ.எம்.களை விட, ஐ.ஐ.எம்.-கோழிக்கோடுவில் தான் அதிகமான மாணவிகள் சேர்க்கப்பட்டனர். அதேப்போல, சிறப்பான பணியிடங்களையும் ஏராளமான மாணவிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.