உள்ளூர் செய்திகள்

முழுமை அடைதலுக்கான வழியே கல்வி!

-ஸ்ரீனிவாசு, துணைவேந்தர், எஸ்.சி.எஸ்.வி.எம்.வி., காஞ்சிபுரம், vc@kanchiuniv.ac.inஎஸ்.சி.எஸ்.வி.எம்.வி.,யின் சிறப்புகள் யாவை? பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் அருளால் காஞ்சியில் நிறுவப்பட்ட விஸ்வ மகாவித்யாலயா, 1993ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் அறக்கட்டளையின் கீழ் உருவாக்கப்பட்ட இப்பல்கலைக்கழகம், காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் ஏனாத்தூரில், 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. உலகளாவிய கண்ணோட்டத்துடன் பாரம்பரிய அறிவை, நவீன அறிவியல் நடைமுறைகளுடன் ஒருங்கிணைப்பதில் பல்கலைக்கழகம் தனித்துவமான கவனம் செலுத்துகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒத்துழைப்புடன் ஓலைச்சுவடிகள் குறித்த ஆராய்ச்சி எஸ்.சி.எஸ்.வி.எம்.வி., வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இன்றைய காலகட்டத்தில் கல்வியின் குறிக்கோள் எதனை நோக்கி இருத்தல் வேண்டும்?கல்வி என்பது புத்தாக்க சிந்தனைகளின் குவியலாக மட்டும் பார்க்கப்படாமல், முழுமையடைதலுக்கான செயல்முறையாக கருதப்பட வேண்டும். மாணவர்களின் திறன் வளர்ச்சிக்கும், அவர்களது மதிப்பு சார்ந்த வாழ்க்கை உயர்விற்கும் வழிவகுப்பதாக அமைய வேண்டும். உயர்கல்வியில் நம்பிக்கை, சுயசார்பு, சுய உணர்தல், அறிவியல் மனப்பான்மை, தொழில் திறன், அறிவுத் தாகம் மற்றும் மனநிறைவு ஆகியவற்றைக் கொண்ட உலகளாவிய குடிமக்களின் புதிய தலைமுறையை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டிருக்க வேண்டும். இவையே உயர்கல்வியின் குறிக்கோளாகவும் இருத்தல் வேண்டும்!ஒரு பல்கலைக்கழகம் எவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும் என்று கருதுகிறீர்கள்?சிறந்த ஆசிரிய-மாணவர் தொடர்புடன் ஒரு குடும்பம் போன்ற அமைப்பாக பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும். அறிவு மேம்படுத்துதலுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், மாணவர்களின் அனைத்து வகையான ஆளுமை வளர்ச்சியையும் வலுயுறுத்த வேண்டும். நமது கலாசாரத்தில் பொதிந்துள்ள சமூகப் பொறுப்பையும், உயர்ந்த மதிப்பு அமைப்பையும் புகுத்தி, அதே நேரத்தில் நவீன தொழில்நுட்பத்தில் திறமையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து செயல்பட வேண்டும். கல்விக்கான செலவுகள் இன்று மிகவும் அதிகமாக உள்ளதே?அனைவரது சமூக மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையிலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மலிவான கட்டணத்தில், தரமான உயர்கல்வி வழங்கப்பட வேண்டும். அதேபோல், மாணவர்களின் பொருளாதார ரீதியான வளர்ச்சியை மட்டும் நோக்கமாக கொண்டிராமல், அவர்களின் உள்ளார்ந்த திறமைகளை அடையாளம் காண்பதற்கும், மறைந்திருக்கும் திறனை வெளிக்கொணர்வதற்கும், முழுமையான மற்றும் மதிப்புகள் சார்ந்த அணுகுமுறை வாயிலாக மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்