மெட்ரிக். ஆங்கிலோ இந்தியன் தேர்வுக்கு் 5ம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மெட்ரிக். மற்றும் ஆங்கிலோ இந்தியன் மார்ச் மாதம் பொது தேர்விற்கான விண்ணப்பங்கள் தனி தேர்வர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.விண்ணப்பங்கள் கடந்த 18ம்தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. மெட்ரிக். பிரிவு ஒவ்வொரு பாடத்திற்கும் ரூபாய் 135 ஆகும்.ஆங்கிலோ இந்தியன் பிரிவு ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.85 ஆகும். விண்ணப்பத்துடன் பள்ளி மூலம் படித்துப் பெற்ற மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் அதற்கு பின்னர் தேர்வு எழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் ஜெராக்ஸ் இணைக்க வேண்டும். விண்ணப்பத்தில் ஒட்டப்படும் புகைப்படத்தில் 10ம் வகுப்பு படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெற்றிருக்க வேண்டும். கட்டணங்கள் அனைத்தும் கருவூல செலுத்துச் சீட்டு மூலமாகவே செலுத்தியிருக்க வேண்டும்.டி.டி. மூலம் செலுத்தப்பட்ட கட்டணத் தொகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஆங்கிலோ இந்தியன் பள்ளி தேர்வில் கடந்த 2001ம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் கீழ் ஆங்கிலப் பாடத்தில் கேட்டல், பேச்சுத்திறன் ஆகியவை புகுத்தப்பட்டுள்ளது. இதற்காக தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் கேட்டல், பேச்சுதிறன் தேர்வில் பெற்ற மதிப்பெண் உண்மை பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும். அதே போல் மார்ச் 2001ம் ஆண்டுக்கு முன் தோல்வியடைந்து தற்போது அறிவியல் பாடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவியல் பாடத்தில் செய்முறை தேர்வினை அவசியம் செய்திருக்க வேண்டும். விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் 5ம் தேதிக்குள் மண்டலத்துணை இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.