விருதுநகர் மாவட்டத்தில் பொதுத்தேர்வுகளை எழுதவுள்ள 52,000 மாணவர்கள்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தாண்டு மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ள 10ம்வகுப்பு பொதுத்தேர்வை, 31,052 மாணவர்களும், பிளஸ் 2 பொதுத்தேர்வை 21,362 மாணவர்களும் எழுத உள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 4,506மாணவர்கள் ,4,926 மாணவியர் என 9,432, ஸ்ரீவி.,கல்வி மாவட்டத்தில் 4,687 மாணவர்கள், 4,679 மாணவியர் என 9,366, விருதுநகர்கல்வி மாவட்டத்தில் 6,219 மாணவர்கள், 6,035 மாணவியர் என 12,254 பேர் எழுதுகின்றனர். இதன்படி மாவட்டத்தில் 15,412 மாணவர்கள், 15,640 மாணவியர் என 31,052 பேர் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வை அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 3,317 மாணவர்கள், 3,509 மாணவியர் என 6,826, ஸ்ரீவி., கல்வி மாவட்டத்தில் 3,045 மாணவர்கள், 3,793 மாணவியர் 6,838 பேர், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 3,541 மாணவர்கள், 4,157 மாணவியர் 7,698 பேர் எழுதுகின்றனர். மாவட்டத்தில் 9,903 மாணவர்கள், 11,459 மாணவியர் என 21,362 பேர் எழுதுகின்றனர்.