உள்ளூர் செய்திகள்

மின் வாரிய காலி பணியிடம் 55,000 ஆக அதிகரிப்பு

சென்னை: கடந்த மார்ச் நிலவரப்படி, மின் வாரியத்தில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை, 55,000ஐ தாண்டியுள்ளது.தமிழக மின் வாரியத்தில், தொழில்நுட்பம், கணக்கு, தணிக்கை, செயலகம், நிர்வாகம் போன்ற பிரிவுகள் உள்ளன. அவற்றில் உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட பதவிகளில், பணியாளர்கள் பணிபுரிகின்றனர். பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை, 1.44 லட்சம்.இந்தாண்டு மார்ச் நிலவரப்படி, 88,774 பேர் பணிபுரிகின்றனர். இதனால், மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை, 55,295 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, இதே காலத்துடன் ஒப்பிடும் போது, 2,001 பேர் ஓய்வு பெற்று உள்ளனர்.அதிக காலி பணியிடங்களால், மின் சாதன பழுதுகளை சரிசெய்வது உள்ளிட்ட பணிகள் தாமதமாகின்றன. இதனால், காலியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு, வாரியத்திற்கு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறுகையில், &'காலியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒப்பந்த ஊழியர்களை நியமிக்காமல், நிரந்தர ஊழியர்களை உடனே நியமிக்க வேண்டும். முதல் கட்டமாக, 5,000 ஊழியர்களை நியமிக்க, அரசு ஒப்புதல் தர வேண்டும்&' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்