உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு ரூ.6.23 கோடி

சென்னை: அரசு பள்ளிகளில் படித்து, உயர் கல்வி நிறுவனங்களில் சேரும், மாணவர்களின் கல்வி செலவை ஏற்க, அரசு 6 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.உதவித்தொகைஅரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, நம் நாட்டில் உள்ள தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அனைத்து மாணவர்களின் கல்வி செலவை, அரசே ஏற்கும்.வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித்தொகை பெற்று, அக்கல்வி நிறுவனங்களில் சேர செல்லும், முதல் பயண தொகையை அரசே ஏற்கும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும், 6 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என, கடந்த ஜூன் மாதம் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.அதன்படி, அரசு பள்ளிகளில் படித்த, 2021 - 22ம் கல்வியாண்டில் 18; 2023 - -24ம் கல்வியாண்டில் 74; நடப்பு கல்வியாண்டில் 333 மாணவர்கள், பல்வேறு தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்துஉள்ளனர்.ஒப்புதல்அவர்களுக்கான கல்வி உதவித்தொகையாக, 6 கோடியே 23 லட்சத்து 8,168 ரூபாய் ஒதுக்க வேண்டும் என, மாதிரி பள்ளிக்கல்வி துறை உறுப்பினர் செயலர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதற்கு நிதித்துறை ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்