உள்ளூர் செய்திகள்

கல்வி துறையின் சந்தை மதிப்பு ரூ.7.80 லட்சம் கோடி­யாக உயரும்!

அதன் விவரம்:நாட்டில், அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த பாரம்­ப­ரி­ய­மான பள்­ளிகள் மற்றும் கல்­லுா­ரி­களின் எண்­ணிக்கை, அதி­க­ரித்து வரு­கி­ன்றன. அது­போல, தனியார் துறையில், கிரீச் எனப்­படும், குழந்தை பாது­காப்பு கூடங்கள், மழ­லையர் பள்­ளிகள், தொழிற்­கல்வி மையங்கள் ஆகி­ய­வையும் பெருகி வரு­கின்­றன. வளமான வாய்ப்பு:தனியார் துறையைச் சேர்ந்த பல பல்­க­லைகள், வெளி­நாட்டு பல்­க­லை­க­ளுடன் இணைந்து, உயர்­த­ர­மான கல்­வியை போதிக்­கின்­றன; அவற்றில், மாணவர் சேர்க்­கையும் அதி­க­மாக உள்­ளது. கடந்த, 2008 – 09ம் நிதி­யாண்டில், நாட்டின் மொத்த பல்­க­லைக்­க­ழ­கங்­களில், தனி­யாரின் பங்கு, 3 சத­வீ­த­மாக இருந்­தது. இது, 2014 – 15ம் நிதி­யாண்டில், 29 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. ஒரு சில தனியார் பல்­க­லைகள், குறு­கிய காலத்தில், சர்­வ­தேச பல்­க­லை­க­ளுடன் கூட்டு மேற்­கொண்டு, தகுதி வாய்ந்த கல்­வி­யா­ளர்­களை நிய­மித்து, தர­மான கல்­வியை போதித்து, சிறப்­பாக வளர்ச்சி கண்­டுள்­ளன. அங்­கீ­க­ரிக்கப் ­பட்ட மாணவர் சேர்க்­கையை கண்­கா­ணிக்கும் அமைப்பு இல்­லா­ததும், இவ்­வ­ளர்ச்­சிக்கு காரணம் எனலாம். கல்­வித்­து­றையின் பல்­வேறு பிரி­வு­களில், தேவைக்கும், அளிப்­பிற்கும் உள்ள இடை­வெளி அதி­க­ரித்து வரு­வது, வள­மான வர்த்­தக வாய்ப்­பிற்கு வழி­கோ­லு­வ­தாக உள்­ளது இந்­திய கல்வித் துறை விரி­வ­டைந்து வரு­வதால், பள்ளி மற்றும் உயர்­கல்வி மையங்­களில், மாணவர் – ஆசி­ரியர் விகி­தாச்­சா­ரமும் அதி­க­மாக உள்­ளது. கிரா­மப்­பு­றங்­க­ளிலும், பெற்றோர், தங்கள் பிள்­ளை­களை, தனியார் பள்­ளி­களில் சேர்க்­கவே ஆர்வம் காட்­டு­கின்­றனர். தேவைகள் கடந்த, 2006ல், தனியார் பள்­ளி­களில், 6 – 14 வய­துள்ள குழந்­தை­களின் சேர்க்கை, 18.7 சத­வீ­த­மாக இருந்­தது. இது, 2014ல், 30.8 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தி­யாவில், வரும் ஆண்­டு­களில் மேலும், இரண்டு லட்சம் பள்­ளிகள், 35 ஆயிரம் கல்­லுா­ரிகள், 700 பல்­க­லைகள் மற்றும் நான்கு கோடி மாண­வர்­க­ளுக்­கான தொழிற்­கல்வி மையங்­க­ளுக்கு தேவை உள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதனால், இத்­து­றையில், தனி­யா­ருக்­கான வர்த்­தக வாய்ப்பும் பிர­கா­ச­மாக உள்­ளது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்