உள்ளூர் செய்திகள்

பொறியியல் சேர்பவர்களுக்கான ரேண்டம் எண்

பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, கட்-ஆப் மதிப்பெண் படி, தர வரிசைப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ரேண்டம் எண், அண்ணா பல்கலை, தேர்வு மைய கட்டடத்தில், ஜூன் 20 ம் தேதி, 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், முதன்மை செயலர் கண்ணன், அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்கின்றனர். சென்னை அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்