உள்ளூர் செய்திகள்

ஆராய்ச்சி ஆர்வம் உள்ளவர்களுக்கான கே.வி.பி.ஒய்.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் கே.வி.பி.ஒய்(கிஷோர் வைக்யானிக் யோஜனா பெல்லோஷிப்) எனப்படும் உதவித்தொகை, அடிப்படை அறிவியல், மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில், இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆராய்ச்சி திறனுள்ள மாணவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு உதவி வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் மாதம் ரூ.4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை வழங்கப்படுவதோடு, ஒரு வருடத்திற்கு ஒருமுறை 4 மாத உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. இதை பெறுபவர்களை தேர்ந்தெடுக்கும் முறை: படிப்பில் எடுத்த மதிப்பெண்கள், நல்ல ஆராய்ச்சி திறன் சோதனை ஆகியவற்றோடு, இறுதி நிலையில் ஒரு நேர்முகத் தேர்வும் நடைபெறும். இதற்கான விண்ணப்பத்தை அனுப்ப செப்டம்பர் 12 கடைசி நாள். இதற்கு தகுதி பெறும் நபர்கள், ஐ.ஐ.டி-மும்பை பேராசிரியர்களால் நடத்தப்படும் கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொள்கிறார்கள். இதைப்பற்றி மேலும் விரிவான விவரங்கள் அறிய www.kvpy.org.in என்ற வலைத்தளம் செல்க.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்