பொறியியல் கவுன்சிலிங் இன்று துவக்கம்
காலை முதலே மாணாக்கர்களும், பெற்றோரும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வரத் துவங்கிவிட்டனர். அதிக பரபரப்புடன் பெற்றோரும், மாணவர்களும் அண்ணா பல்கலையில் கலந்தாய்வு நடைபெறும் வளாகத்தில் காணப்பட்டனர். சரியாக காலை 9 மணிக்கு கலந்தாய்வு துவங்குவதால் 8 மணிக்கே பெரும்பாலான மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். முதல் நாளான இன்று விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. சிறப்பு ஒதுக்கீட்டில் வரும் விளையாட்டுப் பிரிவினர் 3,457 பேர் உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 1,25,000 சேர்க்கை இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.