உள்ளூர் செய்திகள்

தமிழகத்தில் சென்னை, கோவை முதலிடம்

அதேசமயத்தில், கடலூர், அரியலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் பின்னடைந்தும் உள்ளன. மேலும் இந்த 3 மாவட்டங்களும் நகர்மயமாக்கலிலும் பின்னடைவில் உள்ளன. நகர்புற கல்வி கற்றோர் விகிதாச்சாரத்தில், சென்னையும்(30 லட்சத்து 85 ஆயிரம்), கோவையும்(20 லட்சத்து 12 ஆயிரம்) முதல் 2 இடங்களில் உள்ளன. கிராமப்புறங்களில் கல்வியறிவு பெற்றோர் விகிதாச்சாரத்தில் விழுப்புரம் மாவட்டம் முன்னிலைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் குழந்தைப் பிறப்பு பாலின விழுக்காடு விகிதம் சிறிதளவு அதிகரித்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு 1000 ஆண்களுக்கு 942 என்று இருந்த பெண்கள் எண்ணிக்கை, தற்போது 946 என்ற அளவில் உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் 1000க்கு 933 என்ற அளவிலிருந்து 937 என்ற நிலையிலும், நகர்ப்புறங்களில் 1000க்கு 955 என்ற அளவிலிருந்து 957 என்ற அளவிலும் அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில்தான் அதிகமாக(1000க்கு 979) உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவில்(1000க்கு 878) உள்ளது. நகர்ப்புறங்களில் பெண் விகிதாச்சரம் குறைவாய் உள்ள மாவட்டங்களில் அரியலூர் முதலிடம் பெறுகிறது. பெண்களின் கல்வி விகிதத்தைவிட, ஆண்களின் கல்வி விகிதம் அதிகமாக இருப்பது வெளிப்படையான விஷயமாக இருந்தாலும், இரு பாலினத்திற்கும் இடையிலான கல்வி விகித வேறுபாடுகள் 12.95 என்ற அளவில் குறைந்துள்ளன. இந்த வேறுபாடானது கிராமப் பகுதிகளில் 16.56 என்ற அளவிலும், நகர்ப்புறங்களில் 9.16 என்ற அளவிலும் உள்ளது. இதன் ஒட்டுமொத்த சராசரிதான் 12.95. கிராமம் மற்றும் நகர்ப்புற கல்வியறிவு விகிதத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முன்னிலைப் பெற்றுள்ளது. ஆண்களின் கல்வியறிவு விகிதத்தில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் முன்னிலையிலும், தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்கள் பெண்கள் கல்வியறிவு விகிதத்தில் மிகவும் பின்னடைந்தும் உள்ளன. இதுதொடர்பாக இன்னும் பல தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கை இயக்குநர் கோபால கிருஷ்ணன் கூறினார். சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் நகர்மயமாக்கலால், மக்கள் அடர்த்தி விகிதம் அதிகரித்துள்ளன என்பன போன்ற பல்வேறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்