உள்ளூர் செய்திகள்

சி.ஏ. தேர்வில் சாதித்த பெண்கள்

இந்திய கணக்கு தணிக்கையாளர் (சி.ஏ.) தேர்வில் முதல் மூன்று இடங்களையும் பெண்களே பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் எடுத்து மைத்ரேயி நாராயண் சிங் முதலிடத்திலும், ஆர்த்தி ஜெயின் இரண்டாம் இடத்திலும், சார்மி சுரேஷ் மூன்றாம் இடத்திலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில்லாமல், தேர்ச்சி விகிதத்தில் அதிக அளவிலான பெண்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணக்கு தணிக்கையாளர் இறுதியாண்டு தேர்வில், 10,816 மாணவிகளும், 21,603 மாணவர்களும் பங்கேற்றனர். இதில் மாணவிகள் 2,368 பேரும், மாணவர்கள் 4,277 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்