உள்ளூர் செய்திகள்

இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர்கள் மாநாடு

கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் தனியார் மில் வளாகத்தில் செயல்படும் கோவை அண்ணா பல்கலையில் 103 இன்ஜி., கல்லூரி முதல்வர்கள் பங்கேற்கும் மாநாடு, ஆகஸ்ட் 29ம் தேதி காலை 10.00 மணிக்கு நடக்கிறது. கோவை அண்ணா பல்கலையின்கீழ் எட்டு மாவட்டங்களில் 103 இன்ஜி., கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகள் அனைத்திலும் ஆன்லைன் முறையில் தேர்வு நடத்தவும், தேர்வு முறையில் புது நடைமுறையைக் கொண்டுவரவும், பல்கலை முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, பல்கலையின்கீழ் செயல்படும் அனைத்து கல்லூரி முதல்வர்கள் பங்கேற்கும் மாநாடு, அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கிறது. தேதி மாற்றம்: கோவை அண்ணா பல்கலையில் மூன்றாண்டு பி.இ., பி.டெக்., படிப்பிற்கு கவுன்சிலிங் மூலம் மாணவ,மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு செப்., முதல் தேதி வகுப்பு துவக்கப்படுவதாக இருந்தது. ஆனால், நிர்வாக காரணத்தால் செப்.,10ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கப்படும் என பல்கலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்