உள்ளூர் செய்திகள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் காத்திருப்போர் பட்டியல்

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 466 மாணவர்களும், பி.டி.எஸ். படிப்பில் சேர 202 மாணவர்களும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் ஏற்படும் காலியிடங்கள் வகுப்புவாரியாக அட்டவணையிடப்பட்டு, அதற்கேற்ப மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட உள்ளனர். செப்டம்பர் முதல் வாரத்தில் மூன்றாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. கலந்தாய்விற்கு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்படுவார்கள். கலந்தாய்விற்கு அழைக்கப்படும் மாணவர்கள், வகுப்பு வாரியாக காலியாக உள்ள இடங்களை நிரப்ப அனுமதிக்கப்படுகிறது. கட்-ஆப் மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து வரும் மாணவர்களுக்கு, அவர்களது பிரிவில் காலியிடங்கள் இல்லாமல் இருந்தால் அவர்களால் சேர்க்கை பெற இயலாது. இவ்வாறு தினமும் கலந்தாய்வில் பங்கேற்று, சேர்க்கை பெறாமல் போகும் மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவார்கள். அவ்வாறு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர விண்ணப்பித்து காத்திருப்போர் பட்யலில் இடம்பெற்ற மாணவர்களின் பெயர் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்