கல்வித் துறை இயக்குனர்கள் மாற்றம்
சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் எட்டு இயக்குனர்கள், அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக, மணி நியமிக்கப்பட்டுள்ளார். கல்வித்துறையில், 17 இணை இயக்குனர்கள் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், நேற்று புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து, நேற்று எட்டு இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். தொடக்கக் கல்வி இயக்குனராக இருக்கும் மணி, பள்ளிக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.