உள்ளூர் செய்திகள்

சென்னையில் இரண்டு நடிப்புப் பள்ளிகள்

சென்னை: சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வருகிற ஜூலையில் பிலிம் அகாதெமி தொடங்கப்படுகிறது. ரூ.10 கோடி செலவில் தொடங்கப்படும் இந்த அகாதெமிக்கு சிவாஜிகணேசன் மீடியா அகாதெமி என்று பெயரிடப்பட்டுள்ளது. இளநிலை மற்றும் முதுநிலை பட்ட நிலையில் திரைப்படம் தொடர்பான படிப்புகளை இந்த அகாதெமி வழங்கும். தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்த ஆண்டின் இறுதியில் நடிப்பு குறித்த டிப்ளமோ பயிற்சி படிப்பைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்