பி.வி.எஸ்சி., நுழைவுத் தேர்வு:விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை: கால்நடை மருத்துவ பட்டப்படிப்புகளில் - பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.எச்., அகில இந்திய இடங்களுக்கான நுழைவுத் தேர்வு, மே மாதம் நடக்கிறது. கால்நடை மருத்துவக் கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டிற்கான, பி.வி.எஸ்சி., மற்றும் ஏ.எச்., பட்டப்படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப, இந்திய கால்நடை மருத்துவக் கழகம், நுழைவுத் தேர்வு நடத்துகிறது. மே, 11ல் நடக்கும், இத்தேர்விற்கான விண்ணப்பங்களை, வரும், 15ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.தேர்வில் பங்குபெறுவதற்கான, கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம், விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி உள்ளிட்ட விவரங்களை, www.vci.nic.in என்ற இணையதளத்தில் அணுகலாம்.