உள்ளூர் செய்திகள்

பல்கலை பதிவாளர் அதிரடி இடமாற்றம்?

சிதம்பரம்: சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக் கழக பதிவாளரை அதிரடியாக இடமாற்றம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில், தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும், ஒரு அதிரடி நடவடிக்கையாக, அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பதிவாளராக பணிபுரிந்து வந்த, மீனாட்சி சுந்தரம், நேற்று பதவியில் இருந்து திடீரென விடுவிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் அல்லாத பணிக்கு, 58 வயது என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அவருக்கு நேற்றுடன், 58 வயது முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவரை, பதிவாளர் பதவியில் இருந்து விடுவித்து, வணிகவியல் துறை பேராசிரியராக அரசு நியமிக்கவுள்ளது. இதற்கான ஆணை இன்றோ அல்லது நாளையோ வெளியிடப்படும் என, தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்