உள்ளூர் செய்திகள்

நூலகர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

சென்னை: "நூலகத் துறையில் உள்ள, 1,000 மூன்றாம் நிலை நூலகர் காலி பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, தமிழ்நாடு நூலகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சென்னையில், நிருபர்களிடம் சங்க பொதுச்செயலர் முத்துசாமி கூறியதாவது: நூலகத் துறையில், பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. காலி பணியிடங்களை நிரப்பாமல், தினக்கூலி பணியாளர்களை நியமிக்கின்றனர். கன்னிமாரா பொது நூலகத்தில் மட்டும், அதிகமான, நூலகர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நூலகத் துறையில், முதுகலை பட்டப் படிப்பு படித்தவரை, இயக்குனராக நியமிக்க வேண்டும். கல்வித் துறையில் இருந்தே, தொடர்ந்து, இயக்குனரை நியமிக்கின்றனர். பெரும்பாலும், கூடுதல் பொறுப்பு நிலையிலேயே, நூலகத்துறை இயக்குனர் பணியிடம் உள்ளது. இந்த நிலையை மாற்றி, நூலகத் துறைக்கு என, தகுதி வாய்ந்த அதிகாரியை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்