ராமநாதபுரத்தில் ‘ஜெயித்துக்காட்டுவோம்’: ஆசிரியர்களின் டிப்ஸ்...
ராமநாதபுரம்: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்காக டி.வி.ஆர்., அகாடமி சார்பில் ராமநாதபுரத்தில் நடந்த தினமலர் ‘ஜெயித்துக் காட்டுவோம் 2008’ நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை.,யுடன் இணைந்து எம்.ஜி., மஹாலில் நடந்த நிகழ்ச்சியில் காலையில் பத்தாம் வகுப்பு மற்றும் மெட்ரிக்., மாணவர்களுக்கும், பிற்பகலில் பிளஸ் 2 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு வெற்றிக்கான ஆலோசனைகளை ஆசிரியர்கள் வழங்கினர். இதில் பங்கேற்க அதிகாலை 2.45 மணியிலிருந்தே மாணவர்கள் வரத்துவங்கினர். காலை 9 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சியை நிருபர் எம்.எஸ். தண்டபாணி தொகுத்து வழங்கி பேசுகையில் ‘மண்ணின் மைந்தரான டாக்டர் அப்துல் கலாம் கூறியதுபோல இந்தியா 2020ல் வல்லரசாக ஆவது இளைஞர்களான உங்கள் கையில் தான் உள்ளது. அதற்கு இப்போதே தயாராகி விடுங்கள்’ என்றார். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறிய ஆலோசனைகள் : ஆங்கிலம் (சுகந்தி, ராமநாதபுரம் புனித ஆந்திரேயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி): பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும், கட்டுரை மற்றும் செய்யுள் கவி தைகளை நன் றாக படித்தால் அதிக மதிப்பெண் கள் பெறலாம். கணிதம் (நவநீத கிருஷ்ணன், ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி): கணிதத்தில் சூத்திரங்களை நன்றாக எழுதி சரிபார்த்து பாடங்களை முழுமையாக படித் தால் நூறு மதிப்பெண்கள் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. அறிவியல் (முகம்மது இபுராகிம்ஷா, சித்தார்கோட்டை முகமதியா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்): வினாக்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். சில குறிப்பிட்ட பாடங்களில் முக்கிய வினாக் களை நன்கு படித்தால் எளிதில் அதிக மதிப் பெண்கள் பெறலாம். சமூக அறிவியல் (கோகிலா, குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி): அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை நினைவில் வைத்து வரலாறு குடிமையியல், புவியியல் பாட திட்டங்களை முழுமையாக படித்தால் நூறு சதவீத மதிப்பெண் பெறலாம். பத்தாம் வகுப்பு மெட்ரிக்.,: ஆங்கிலம் (விஜயலட்சுமி, ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக்., பள்ளி): விடைத்தாளில் நிர்ணயிக்கப்பட்ட வரிகளுக்கு அதிகமாக எழுத கூடாது. ஆங்கில பாடத்தை தன்னம்பிக்கையுடன் படித்து தெளிவாக எழுத வேண்டும். கணிதம் (ஜெயலட்சுமி, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி மெட்ரிக்., பள்ளி): மாணவர்கள் வாரத்துக்கு ஒரு முறையாவது படித்த பாடங் களை எழுதி பார்த்து ஆசிரியரிடம் சரிபார்க்க வேண்டும். அல்ஜிப் ராக்களை நன்றாக படித்து எழுதினால் அதிகமதிப் பெண் பெறலாம். அறிவியல் முதல்தாள் (புஷ்பலதா, ராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக்., பள்ளி ஆசிரியர்): அறிவியலில் முதல் நான்கு பாடங்களை நன்றாக படித்தாலே நல்ல மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதும்போது எண்ணையும் அதற்கான விடையையும் எழுத வேண்டும். அறிவியல் இரண்டாம் தாள் (ஸ்டெல்லா, ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக்., பள்ளி): கேள்வியின் முக்கியத்துவத்தை தெரிந்து பாடங்களில் உள்ள முக்கிய குறிப்புகளை சரியாக எழுத வேண்டும். படங்களை வரையும் போது அதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டும். பிளஸ் 2 : ஆங்கிலம் (ராகவேந்திரன், ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி): விடைத் தாளில் அடித்தல் திருத்தல் இன்றி தெளிவாக எழுத வேண்டும். இறந்த, நிகழ், வருங்கால வாக்கியங்களை சரியாக குறிப்பிட வேண்டும். ஆங் கில கட்டுரைகளில் முதல் மூன்று பாடங்களை படித்தாலே எளிதில் தேர்ச்சி பெறலாம். கணிதம் (சீனிவாசன், ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி): கணிதப்பாடங்களை உடனுக்குடன் செய்து பார்த்து பதில் கிடைக்காவிட்டால் மனம்தளராமல் மீண்டும் செய்து பார்த்து ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும். அனைத்து பாடங்களையும் சரியாக எழுதி பார்த்தால் நூறு சதவிதம் எளிதாக பெறலாம். இயற்பியல் (டேனியல், பனைக்குளம் பகுருதீன் அரசு மேல்நிலைப்பள்ளி): இயற்பியலில் திட்டமிட்டு படித்தால்தான் எளிதில் வெற்றி பெற முடியும். முந்தைய தேர்வுகளில் கேட்கப்படாத கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதனையும் முழுமையாக படிக்க வேண்டும். பதில்கள் எழுதும் போது சமன்பாடுகளையும் எழுதினால் அதிக மதிப்பெண் பெற வாய்ப்பு உண்டு. தாவரவியல் (பத்மாவதி, கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி): பயத்தை போக்கிவிட்டு ஆர்வத்துடன் தினமும் நடத்தப்பட்ட பாடங்களை படித்து விட வேண்டும். தாவர குடும்பங்களின் சிறப்பு பண்புகளை தெரிந்து கொண்டு விளக்கங்களையும் எடுத்துகாட்டுடன் எழுதவேண்டும். கேள்வி மதிப் பெண்களை தெரிந்து அதற்கு உண்டான விளக்கங்களை மட்டும் பதிலாக எழுத வேண்டும். விலங்கியியல் (வேல்பாண்டியன், ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி): மரபியல் பாடத் தினை அதிக முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் படித்தால் அதிக கேள்விகளுக்கு விடையளிக்க முடியும். மதிப்பெண்களின் அளவை பொறுத்து விடைகளின் விரிவாக்கம் இருக்க வேண்டும். வேதியியல் (சிதம்பரநாதன், இரட்டையூரணி அரசு மேல்நிலைப்பள்ளி): சமன்பாடுகளை எழுதும்போது வினைபடு பொருள், வினை விளை பொருள் எழுத வேண்டும். ஆறு பாடங்களை படித்தாலே 55 மதிப்பெண்கள் பெறலாம். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு தினமலர் நாளிதழ் சார்பில் ‘ஜெயித்துக் காட்டுவோம்’ மாதிரி வினா, ‘உடம்பும் மனசும் நல்லா இருக்கணும்’ புத்தகங்கள், பேடு, பேனா இலவசமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இடையே மாணவ மாணவிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. முத்துப்பேட்டை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி கூறும்போது ‘நன்றாக படிப்பதற்காக எனது தந்தை இரவு பகல் பாராமல் விழித்திருந்து ஊக்கப்படுத்தி வருகிறார். படித்து நல்ல நிலையை அடைந்து கடைசி வரை எனது தந்தையை காப்பாற்றுவேன் என அழுதபடி கூறினார்’. இது அனைவரையும் கண்கலங்க செய்தது.