உள்ளூர் செய்திகள்

பொறியியல் தேர்வுகள் தள்ளி வைப்பு

பல்கலைக்கழகத்தின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட அறிவிப்பில், "அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் 15ம் தேதி (நாளை) நடக்க இருந்த இளநிலை, முதுகலை பொறியியல் தேர்வுகள் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. எம்.பி.ஏ., எம்.சிஏ., எம்.எஸ்சி., பி.எஸ்சி., தேர்வுகள் 30ம் தேதி நடக்க இருந்தது. இந்த தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகின்றன. தேர்வு நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்" என, தெரிவித்துள்ளார். இதேபோல், சென்னை பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் கல்லூரிகளில், நாளை நடக்க இருந்த தேர்வுகள், டிசம்பர் 11ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. முகரம் பண்டிகையை ஒட்டி நாளை அரசு விடுமுறை. எனவே, நாளை நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்