மாநில அளவிலான ஹாக்கி போட்டி
திண்டுக்கல்: பட்டேல் ஹாக்கி அகாடமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான அங்கு விலாஸ் எம்.வி.எம். செல்லமுத்துபிள்ளை 2ம் ஆண்டு நினைவு சுழற்கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ளது. திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜூலை 18 முதல் ஜூலை 20 வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் அணிகளுக்கு தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படும். வெற்றி பெறும் முதல் இரு அணிகளுக்கு கோப்பை, கேடயம் வழங்கப்படும். விபரங்களுக்கு 99947 24840ல் தொடர்பு கொள்ளலாம் என பட்டேல் ஹாக்கி அகாடமி செயலர் ஞானகுரு தெரிவித்துள்ளார்.