சிங்கம்புணரி வட்டார கல்விக்குழு கூட்டம்
சிங்கம்புணரி: சிங்கம்புணரி வட்டார கல்விக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எஸ்.எஸ்.ஏ.,திட்டத்தில் சிங்கம்புணரி துவக்கப்பள்ளி எண்:1,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குமரத்தகுடிப்பட்டி, பூலாத்தகுறிச்சி துவக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ரூ.49 லட்சத்தில் நடக்க உள்ளது. இப்பணியை 120 நாளில் முடிக்கவும், ஒன்றியத்தில் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு வாசித்தல், எழுத்துதிறன் அதிகரிக்க தொடர் ஆய்வு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் வாசு தலைமை வகித்தார். பி.டி.ஓ.,கோட்டைமலை முன்னிலை வகித்தார். மேற்பார் வையாளர் பூபதிவெள்ளளைச்சாமி வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஒருங் கிணைப்பாளர் சேவுகமூர்த்தி நன்றி கூறினார்.