சமூக நல்லிணக்க நாள் கொண்டாட்டம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நேரு யுவகேந்திரா, குண்டலப்புலியூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து சமூக நல்லிணக்க நாள் கொண்டாடப்பட்டது. குண்டலப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி, பேச்சு, கட்டுரை, ஓவிய போட் டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இளைஞர் நற்பணி மன்ற தலைவர் தங்கராசு வரவேற்றார். மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் மயில்சாமி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் அனைவரும் சமூக நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றனர். பள்ளி தலைமை ஆசிரியர் அப்துல் ரகுமான், ஊராட்சி துணை தலைவர் பத்மா உட்பட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மன்ற செயலாளர் சுவாமிமலை நன்றி கூறினார்.