பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள்
மதுரை: ஸ்ரீ லட்சுமி நாராயண வித்யாலயா பள்ளியில், பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. கைப்பந்து போட்டியில் டி.வி.எஸ்., சுந்தரம் பள்ளி முதலிடம், அப்பர் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. எறிபந்து போட்டியில் சி.இ.ஓ.ஏ., பள்ளி முதலிடம், டி.வி.எஸ்., சுந்தரம் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. கோ கோ போட்டியில் வேலம்மாள் பள்ளி முதலிடம், அண்ணாமலையார் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. கபடி போட்டியில் சரஸ்வதி பள்ளி முதலிடம், அண்ணாமலையார் பள்ளி இரண்டாமிடம் பெற்றன. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, பள்ளித் தலைவர் நாராயணன் பரிசு வழங்கினார். முதல்வர் கிறிஸ்டில்லா சைலஸ் ஏற்பாடுகளை செய்தார்.