கல்வித்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
காரைக்குடி: காரைக்குடியில், கல்வித்துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. மெட்ரிக்., பள்ளிகள் இணை இயக்குனர் கார்மேகம் தலைமை வகித்தார். கலெக்டர் ராஜாராமன், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல் முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வி அலுவலர்கள் (பொறுப்பு) சவுந்திரராஜன், நல்லமுகமது, தொடக்கக் கல்வி அலுவலர் நீலவேணி உட்பட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், இணை இயக்குனர் கார்மேகம் பேசியதாவது: அரசின் நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும். மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும். தேர்ச்சியை அதிகரிக்க கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும், என்றார்.