உள்ளூர் செய்திகள்

அங்கன்வாடிக்குள் மழைநீர்: குழந்தைகள் பாதிப்பு

ராஜபாளையம்: கம்மாபட்டி அங்கன்வாடி மைய மேற்கூரை தேசம், சுவருக்கு பதில் சிமென்ட் கிராதி உள்ளதால், வகுப்பறைக்குள் மழைநீர் தேங்குகிறது. இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர். தெற்குவெங்காநல்லூர் ஊராட்சியை சேர்ந்த கம்மாபட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன் அங்கன்வாடி மையம் துவக்கப்பட்டது. மையத்தின் மேற்கூரை சிமென்ட் சீட்டில் உள்ளது. இதில் ஓட்டை உள்ளதால் மழை பெய்யும்போது வகுப்பறைக்குள் தண்ணீர் விழுகிறது. வகுப்பறையின் இருபுறங்களில் சுவர் அமைக்காமல், சிமென்ட் கிராதி வைத்து உள்ளனர். இந்த கிராதி வழியாகவும் மழைநீர் வகுப்பறைக்குள் வருகிறது. பொருட்கள் வைப்பறை பராமரிப்பு இன்றி இருப்பதால் வகுப்பறையின் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மையத்திற்கு செல்லும்பாதையும் சேரும் சகதியுமாக உள்ளது. இதனால் குழந்தைகள் பாதிக்கின்றனர். அப்பகுதி விஜயன், "25 குழந்தைகள் இங்கு படிக்கின்றனர். மழை பெய்தால், வகுப்பறைக்குள் தண்ணீர் செல்கிறது. பல ஆண்டுகளாக இந்நிலை நீடிக்கிறது. புதியகட்டடம் கட்ட ஏற்பாடு நடக்கிறது என்கின்றனர். பணிகள்தான் துவங்கவில்லை" என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்