பேஸ்புக் பரீதம்; மாணவி தற்கொலை
மஹாராஷ்டிரா: மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவி, சமூக வலைதளமான, பேஸ்புக்கில், தன்னை பற்றிய ஆபாச படங்களை, சக மாணவன் வெளியிட்டதால் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி, 10ம் வகுப்பு படித்து வந்தார். சக மாணவன் ஒருவன், மாணவியை பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். போலீசார், அந்த மாணவனை எச்சரித்து விடுவித்தனர். ஆத்திரம் அடைந்த அந்த மாணவன், மாணவியை ஆபாசமாக சித்தரித்து, பேஸ்புக்கில் படங்களை வெளியிட்டான். அதிர்ச்சி அடைந்த மாணவி, தன் வீட்டு மாடியில் இருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அந்த மாணவன் கைது செய்யப்பட்டான்.