டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி
அன்னுார்: அன்னுாரில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 7ம் தேதி துவங்குகிறது. அன்னுாரில், நேதாஜி கல்வி மையம் சார்பில், தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனின் குரூப், 2, குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான சிறப்பு தமிழ் பயிற்சி வகுப்பு வரும், 7ம் தேதி துவங்குகிறது. பயிற்சி வகுப்பு ஒவ்வொரு வாரமும் திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் மாலை 6:00 முதல் 8:00 மணி வரை, மேட்டுப்பாளையம் ரோட்டில் சரவணா பில்டிங்கில் நடக்கும். எந்த கட்டணமுமில்லை. மேலும் விபரங்களுக்கு, 98420 44701 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.