இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி
கோவை: சமஸ்கிருத பாரதி சார்பில் இலவச சமஸ்கிருத பேச்சு பயிற்சி மற்றும் பகவத்கீதை வகுப்புகள் நாளை துவங்குகிறது. கோவை மாநகர ஒருங்கிணைப்பாளர் ராகவேந்திரன் அறிக்கை: டிச.,11 வரை நடக்கும் பயிற்சி வகுப்பில், பத்து வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்கலாம். ஆர்.எஸ்.புரம், காந்திபார்க், கணபதி, சிங்காநல்லுார், பீளமேடு மற்றும் வெள்ளலுார் ஆகிய ஆறு இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கவுள்ளன. காலை, 10:30 முதல், 12:30 மணி வரையிலும், மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரையிலும் இரு பிரிவுகளாக பயிற்சி வழங்கப்படும். விருப்பமுள்ளோர் முன்பதிவிற்கு, 94433 94367 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்திருந்தார்.