உயர்கல்விக்கு தனிப்பெயர் பெற்ற ‘ஹாங்காங்’!
பிரபலமான படிப்புகள்: மேலாண்மை, பொருளாதாரம், பொறியியல் மற்றும் அறிவியல், சமூக அறிவியல் போன்ற பாடப்பிரிவுகள் இந்திய மாணவர்களின் முதன்மை தேர்வாகவே உள்ளது. கல்வி கட்டணம் மற்றும் செலவுகள்: ஹாங்காங் பல்கலைக்கழகங்களில், கல்விக் கட்டணமாக ஆண்டுக்கு ரூபாய் 7 லட்சம் முதல் 25 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, தங்குமிடம், உணவு மற்றும் இதர செலவினங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் செலவாகும். உதவித்தொகைபல பல்கலைக்கழகங்கள் ‘மெரிட்’ அடிப்படையில், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிவருகிறது. ஹாங்காங் அரசாங்கத்தின் எச்.கே.எஸ்.ஏ.அர்., (ஹாங்காங் ஸ்பெஷல் அட்மினிட்ரேடிவ் ரீஜியன் கவர்மென்ட் ஸ்காலர்ஷிப்) உதவித்தொகை திட்டத்திலும் கல்வி உதவித்தொகையை பெறலாம். அதுமட்டுமின்றி யூனிவர்சிட்டி ஆப் ஹாங்காங், திறமையான மாணவர்களைத் தேர்வு செய்து, ஆண்டுக்கு ஒட்டு மொத்தமாக 6.62 கோடி ரூபாய் அளவில் உதவித்தொகை வழங்குகிறது. சுய நிதி பிரிவில், முழுநேரமாக இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ’தி செல்ப் பைனான்சிங் போஸ்டு செக்கன்டரி எஜூகேஷன் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தில் ஆண்டிற்கு 68 லட்சம் ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மேலும், பிஎச்.டி., படிக்க விரும்பும் சர்வதேச அளவில் சிறந்த விளங்கும் மாணவர்களுக்கு, ஹாங்காங் அரசாங்கம் ’தி ஹாங்காங் பிஎச்.டி., பெல்லோஷிப்’ திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு 19 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கிவருகிறது. இவைதவிர, பகுதி நேர வேலை வாய்ப்பு மற்றும் இன்டர்ன்ஷிப் மூலமாக குறிப்பிட்ட அளவு சம்பாதிக்கவும் முடியும்! சிறந்த ஹாங்காங் பல்கலைக்கழகங்கள் யூனிவர்சிட்டி ஆப் ஹாங்காங் பிரபலமான பாடங்கள்: கலை, மானுடவியல், பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், லைப் சயின்ஸ், பிசிகல் சயின்ஸ். கால அளவு: 4 ஆண்டுகள் கல்விக் கட்டணம்: ஆண்டுக்கு 8 லட்சம் முதல் 11 லட்சம் ரூபாய் வரை தி சயினிஸ் யூனிவர்சிட்டி ஆப் ஹாங்காங் பிரபலமான பாடங்கள்: கலை, மானுடவியல், கணிதம், உளவியல், கம்பியூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் சிஸ்டம், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். கால அளவு: 4 ஆண்டுகள் கல்விக் கட்டணம்: ஆண்டுக்கு 6 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை தி ஹாங்காங் யூனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி பிரபலமான பாடங்கள்: பொறியியல், தொழில்நுட்பம், நேச்சுரல் சயின்ஸ் மற்றும் பயாலஜிகள் சயின்ஸ்.கால அளவு: 4 ஆண்டுகள் கல்விக் கட்டணம்: ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை தி ஹாங்காங் பாலிடெக்னிக் யூனிவர்சிட்டி பிரபலமான பாடங்கள்: கலை, மானுடவியல், பொறியியல், தொழில்நுட்பம், கணிதம் மற்றும் சமூகவியல்கால அளவு: 4 ஆண்டுகள் கல்விக் கட்டணம்: ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை சிட்டி யூனிவர்சிட்டி ஆப் ஹாங்காங் பிரபலமான பாடங்கள்: கலை, மானுடவியல், பொறியியல், தொழில்நுட்பம், மெட்டீரியல் சயின்ஸ், பாலிடிக்ஸ் அன்ட் இன்டர்நேஷ்னல் ஸ்டடிஸ். கால அளவு: 4 ஆண்டுகள் கல்விக் கட்டணம்: ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை