உள்ளூர் செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை: சென்னை உட்பட, நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளப் பேரழிவால்,பள்ளி மற்றும் கல்லுாரிகளின் விடுமுறை தொடர்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம் மற்றும் கடலுார் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்