மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் தூய்மைபணி
கோவை: ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில், என்.சி.சி., மாணவர்கள் சார்பில் துாய்மைப்பணி நடந்தது.துாய்மை இந்தியா திட்டத்தின் ஒருபகுதியாக, தமிழ்நாடு 4வது பட்டாலியன் படை என்.சி.சி., மாணவர்கள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இணைந்து துாய்மைப்பணியில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் உள்ள, பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் நீர் தேங்கியுள்ள பகுதிகளை, மாணவர்கள் சுத்தம் செய்தனர். என்.சி.சி., கமாண்டன்ட் ஜோசப் ஆன்டனி மற்றும் நிர்வாக அலுவலர் ரூபா மாணவர்களை வழி நடத்தினர். துாய்மைப்பணி நிறைவில், வீட்டையும், வீதியையும் துாய்மையாக வைத்துக்கொள்வோம் என மாணவர்கள் உறுதிமொழியேற்றனர்.