உள்ளூர் செய்திகள்

பல்கலை கன்வீனர்கமிட்டி உறுப்பினர் விடுவிப்பு!

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கன்வீனர் கமிட்டி உறுப்பினர் ராஜராஜனை விடுவித்து சென்னையில் நேற்று நடந்த சிண்டிகேட் உறுப்பினர் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. உயர்கல்வி செயலரும் இப்பல்கலை கன்வீனர் கமிட்டி தலைவருமான அபூர்வா தலைமையில் சிண்டிகேட் உறுப்பினர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட கன்வீனர் கமிட்டியால் சில முக்கிய முடிவுகள் எடுக்க தாமதமாகிறது. இதனால் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற பரிந்துரையை சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர் முன்வைத்தனர்.இதன் அடிப்படையில், மூன்று உறுப்பினர்களில் ஒருவரை விடுவிக்க சிண்டிகேட் முடிவு செய்து, உறுப்பினர்களிடையே ஓட்டெடுப்பு நடந்தது. அதில் ஆறு சிண்டிகேட் உறுப்பினர்களும் ராஜராஜன் பெயரை எழுதிக் கொடுத்தனர். இதன் அடிப்படையில் கன்வீனர் கமிட்டி உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரை விடுவித்து முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கன்வீனர் கமிட்டி உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், வெங்கட்ராமன், சிண்டிகேட் உறுப்பினர்கள் தென்னரசு, பக்ஷிராஜன், விஜயரங்கன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயலர் விசாரணை: பல்கலையில் தற்காலிக பணியாளர்கள் (சி.எல்.ஆர்.,) நியமனம், உறுப்பு கல்லுாரிகளில் கவுர விரிவுரையாளர்கள் நியமனம், துணைவேந்தர் கார் விதிமீறி பயன்படுத்தப்பட்டது உட்பட பல்வேறு புகார்கள் செயலர் அபூர்வாவிற்கு சென்றன. மேலும் பல்கலை விருந்தினர் இல்லத்தில் நடந்த தீ வைப்பு சம்பவத்தில் குறிப்பிட்ட சிலரை திட்டமிட்டு சிக்க வைக்க முயன்றதாகவும் புகார் எழுந்தன. சிண்டிகேட் கூட்டத்தில் இப்பிரச்னைகள் குறித்து தீவிரமாக செயலர் அபூர்வா விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்