உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு பள்ளியில், பொதுத்தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்த, மாணவ, மாணவியருக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தமிழரசு தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் அகமது பாஷா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கேசவன், பள்ளி தலைமை ஆசிரியர் சின்னராஜ் ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் எஸ்.பி., திருநாவுக்கரசு பேசியதாவது: அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், திட்டமிட்டு படிக்க வேண்டும். ஒவ்வொரு நாளையும் நன்றாக பயன்படுத்தி கொண்டு, பயம் இல்லாமல் தேர்வு எழுதினால் வெற்றி நிச்சயம். நாம் அனைவரும் சாதனையாளர்கள் தான். எனவே, அனைத்து மாணவர்களும் நன்றாக படித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களிடம், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்த மாணவர்களுக்கு, திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. தேர்வில் எளிதாக வெற்றி பெற, மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வது எப்படி என்பது குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்