எழுத்து அமைப்பின் நூல்கள் வெளியீடு
கோவை: தமிழ் இலக்கிய தளத்தில் புதிய சிந்தனைகளை வெளிக்கொண்டு வரும் நோக்கத்தோடு, எழுத்து அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பின் சார்பில் இரண்டாம் கட்ட நுால் வெளியீட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட நுால்களின் வெளியீட்டு விழா, கோவை ஆர்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவன் அரங்கில் இன்று மாலை, 6:00 மணிக்கு நடக்க உள்ளது. இதில், தஞ்சாவூர் கவிராயர் எழுதிய, கைராட்டை கோபம் சிறுகதை நுால், கவிஞர் ஜெயதேவன் எழுதிய, அம்மாவின் கோலம் கவிதை நுால் ஆகியவை வெளியிடப்படுகிறது. பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் நுால்களை வெளியிட்டு கருத்துரை வழங்குகிறார். கவிஞர் வைரமுத்து, ப.சிதம்பரம், டாக்டர் அவ்வை நடராஜன், கவிஞர் மரபின்மைந்தன் முத்தையா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.