உள்ளூர் செய்திகள்

அவ்வையார் கல்லூரியில் விளையாட்டு போட்டி

காரைக்கால்: காரைக்கால் அவ்வை யார் அரசு மகளிர் கல்லுாரியில் 44ம் ஆண்டு விளையாட்டு போட்டி மற்றும் ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் முனைவர் தில்லைவனம் முன்னிலை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினரான கலெக்டர் கரிகாலன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கிவைத்தார். காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் கீதா தலைமை தாங்கி, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார். மனையியல் துறை பேராசிரியர் பிரைட்டி, வினாயகா மிஷன் பல்கலைக் கழகப்புலவர் டாக்டர் அன்னாபெல் ராஜசேகரன், புதுச்சேரி தாகூர் அரசு கலைக் கல்லுாரி போராசிரியர் இளங்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்