உள்ளூர் செய்திகள்

செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

திண்டுக்கல்: மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர் - வீராங்கனைகளுக்கான போட்டித் தேர்வு திண்டுக்கல்லில் நடக்கிறது. சென்னை வானகரத்தில் மே 1 முதல் 5 வரை 7 வயதுக்குட் பட்டோருக்கான மாநில &'செஸ்&' போட்டி நடக்க உள்ளது. அதேநாளில் ஈரோட்டில் 17 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டிகள் நடக்க உள்ளன. இதில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனைகளுக்கான தகுதித்தேர்வு போட்டிகள் ஏப்.,24ல் நடக்க உள்ளது. திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு, சொசைட்டி தெருவில் உள்ள &'ஆனந்த் செஸ் அகாடமியில் இப் போட்டிகள் நடக்க உள்ளன. ஆண்கள், பெண்கள் என ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பெறும் 8 பேர், திண்டுக்கல் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில், மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு 92451 24106ல் தொடர்பு கொள்ளலாம் என, சங்க தலைவர் சுந்தரராஜன், செயலாளர் அப்துல்நாசர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்