கடல்சார் பயிற்சி மாணவர் சேர்க்கை
மத்திய கடல்சார், மீனவள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில், ஆழ்கடல் மீன்பிடி மற்றும் வணிக கப்பல்களில் இன்ஜினியர்கள், கேப்டன்களாக பணிபுரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. டி.ஜி.இ.டி.,யால் அங்கீகாரம் பெற்ற, வெசல் நேவிகேட்டர் மற்றும், மெரைன் பிட்டர் பயிற்சிக்காக, தங்கும் விடுதி மற்றும் மாதம், 1,500 ரூபாய் அரசு உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு காலியாக உள்ள இடங்களுக்கு ஜூன், 18ல், அகில இந்திய நுழைவுத் தேர்வு நடக்கிறது. இதற்கு, 10ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியலில், 50 சதவீத மதிப்பெண் பெற்று, தேர்ச்சி அடைந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.cifnet.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 27க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.