உள்ளூர் செய்திகள்

பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

விழுப்புரம்: மயிலம் பொறியியல் கல்லுாரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடந்தது. மயிலம் பொறியியல் கல்லுாரி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் செந்தில் கருத்தரங்கின் முக்கியத்துவம் பற்றி கூறினார். டீன் ராஜப்பன், மின்னணுவியல் பொறியியல் துறை தலைவர் முரளிகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், ஆதிபராசக்தி பொறியியல் கல்லுாரி பேராசிரியர் இளங்குறிசில், கே.பி.ஜி., பொறியியல் கல்லுாரி முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில், பல்வேறு பொறியியல் கல்லுாரியில் இளநிலை, முதுநிலை பயிலும் மாணவர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர். இதில் சிறந்த 45 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு, வெளியிடப் பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், ராதிகா ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்