மருத்துவக் கல்லூரி தொடங்குகிறது அப்போலோ
இளநிலைப் பட்ட வகுப்புகளுடன் இந்த புதிய மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என்று அப்போலோ மருத்துவமனைகளின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி தெரிவித்தார். மூன்று பிரபல சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் அப்போலோ நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இத்திட்டத்திற்காக 18 பில்லியன் ரூபாய் நிதி முதலீடு செய்ய அப்போலோ குழுமம் திட்டமிட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு மருத்துவமனைகளில் கூடுதலாக இரண்டாயிரம் படுக்கைகள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.