தமிழக மாணவர்கள் ரஷ்யாவில் பலி
சென்னை; ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இறந்த, தமிழக மாணவர்களின் உடல்களை, சொந்த ஊர்களுக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.ரஷ்யாவில் உள்ள, வால்கோ கிராட் ஸ்டேட் மருத்துவ பல்கலையில், மருத்துவம் படித்து வந்த, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆஷிக், கடலுார் விக்னேஷ், சேலம் மனோஜ், சென்னை ஸ்டீபன் ஆகியோர், இம்மாதம், 8ம் தேதி, ரஷ்யாவின் வேல்கா ஆற்றில் குளித்தனர்.அப்போது, சுழலில் சிக்கி இறந்தனர். இதை அறிந்த, முதல்வர் இ.பி.எஸ்., அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். வெளியுறவு அமைச்சகம், ரஷ்யாவில் உள்ள, இந்திய துாதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, இறந்த மாணவர்களின் உடல்களை, அவரவர் சொந்த ஊருக்கு கொண்டு வர, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, அரசு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.பா.ஜ., வலியுறுத்தல்தமிழக பா.ஜ., தலைவர் முருகன், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு, ரஷ்யாவில்இருந்து மாணவர்களின் உடல்களை, சொந்த ஊர்களுக்கு எடுத்து வர, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்; கடிதமும் அனுப்பியுள்ளார்.&'விரைவில், மாணவர்களின் உடல், அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும். அதற்கான தொடர் முயற்சியில், என்னை அர்ப்பணித்துள்ளேன்&' என, முருகன் தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ., துணை தலைவர் வானதி சீனிவாசனும், வெளியுறவு அமைச்சருக்கு, &'டுவிட்டர்&' வாயிலாக கோரிக்கை விடுத்து உள்ளார்.