உள்ளூர் செய்திகள்

சான்றிதழ் பதிவேற்றம் டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

சென்னை: சுற்றுலா துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ்களை பதிவேற்ற, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அவகாசம் அளித்துள்ளது.தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:உதவி சுற்றுலா அதிகாரி நிலை - 2 பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், வரும், 26ம் தேதி முதல், நவ., 5க்குள் தங்கள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.தகவல் தொழில்நுட்ப துறையில் கணினி அமைப்பு, இன்ஜினியர் மற்றும் பகுப்பாய்வாளர் பணி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 27ம் தேதி முதல் நவம்பர், 5க்குள், தங்கள் அசல் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.சான்றிதழ் பதிவேற்ற வேண்டியவர்களின் பட்டியல் மற்றும் விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்