உள்ளூர் செய்திகள்

அகழாய்வு பொருட்கள்: அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம் கீழடி, மணலுார், கொந்தகை, அகரம்; ஈரோடு மாவட்டம், கொடுமணல்; துாத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லுார், சிவகளை ஆகிய ஏழு இடங்களில், தமிழக தொல்லியல் துறை அகழாய்வு நடத்தியது.கடந்த மாதம், அந்த பணிகள் முடிந்தன. இவற்றில், 5,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன. சில பொருட்களில், தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. செங்கல் கட்டுமானம், உறைகிணறு, முதுமக்கள்தாழிகள் உள்ளிட்டவையும் வெளிப்பட்டு உள்ளன. இவற்றை அந்தந்த இடங்களில் வைத்து, விபரங்களை சேகரித்து பாதுகாத்து வருகின்றனர். தீபாவளிக்குப் பின், இந்தப் பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்