உள்ளூர் செய்திகள்

மருத்துவர் பணி சான்றிதழ் சரிபார்ப்பு

சென்னை: கால்நடை மருத்துவர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக கால்நடை பராமரிப்பு துறையில், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கான தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, &'ஆன்லைனில்&' நடத்தப்பட உள்ளது.எனவே, தேர்ச்சி பெற்றவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை, இன்று முதல் வரும், 6ம் தேதிக்குள், &'இ- - சேவை&' மையங்கள் வழியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டோர் விபரங்கள், இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்