டி.இ.ஓ., தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: வட்டார கல்வி அலுவலரான, டி.இ.ஓ., பதவிக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டு உள்ளது.தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, வட்டார கல்வி அலுவலர் பதவிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே, 2019 நவம்பரில், கணினி வழி தேர்வு நடத்தப்பட்டது. இதில், 43 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கான விடைக்குறிப்பு, 2020, பிப்ரவரியில் வெளியிடப்பட்டு, ஆட்சேபனைகள் பெறப்பட்டன. இதையடுத்து, விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண் விபரம் நேற்று வெளியானது.விபரங்களை, http://trb.tn.nic.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.