பாடநூல்களை அச்சிட மீண்டும் விண்ணப்பங்கள்
கடந்த ஜூன் மாத இறுதியில் செய்யப்பட்ட விலையை ஏற்று அச்சிட விரும்புவோர் வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிப் பாட நூல்களை அச்சிடுவதற்கான ஒப்பந்தம் நான்கு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு ஜூன் கடைசியில் இறுதி செய்யப்பட்டது. பாட நூல்களை அச்சிடுவதற்கான விலை கட்டுப்படியாகததால் விலையை அதிகரித்து நிர்ணயிக்க வேண்டும் என்று அச்சக உரிமையாளர்கள் கோரினர். இதற்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் கடந்த 2ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் பாடநூல்களை அச்சிடுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில், பழைய விலையை ஏற்று பாடநூல்களை அச்சிடுவதற்கு அச்சக உரிமையாளர்கள் தயாராகி விட்டதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே பாட நூல்களை அச்சிட இரண்டாவது முறையாக விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக பாட நூல் கழகம் அறிவித்துள்ளது. பாடநூல் கழக வட்டாரங்கள் கூறுகையில், எல்லாப் பிரச்சினையும் தீர்ந்து விட்டது. பழைய விலையில் அச்சிடுவதற்கான உத்தரவுகள் ஓரிரு நாளில் அச்சக உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். விலையில் எந்தவித மாற்றங்களும் கிடையாது என்று தெரிவித்தன. இதன்மூலம் பாட நூல் கழக பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.எனினும், பள்ளி திறப்பதற்குள் பாட நூல்கள் அச்சிட்டு முடிக்கப்படுமா, பள்ளி திறந்ததும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படுமா என்பது ஏரல், மே மாதங்களில்தான் தெரியும்.