உள்ளூர் செய்திகள்

யு.ஜி.சி., நெட் தேர்வு எப்போது?

முதுநிலை படிப்பு முடித்தோர், கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, &'யு.ஜி.சி., - நெட்&' எனப்படும், தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். கல்லுாரி மற்றும் பல்கலைகளில் படிக்கும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி உதவி தொகை பெறவும், நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். ஆண்டுக்கு ஒரு முறை, நெட் தேர்வு நடத்தப்படுகிறது. பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் இந்த தேர்வை, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது.&'நடப்பாண்டில், நாடு முழுதும், மே, 2ல் துவங்கி, 17 வரை, நெட் தேர்வு நடக்கும்&' என, யு.ஜி.சி., நேற்று அறிவித்தது. மேலும் தகவல்கள், ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்