உள்ளூர் செய்திகள்

தமிழாராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஏ., படிப்பு

சென்னை: தஞ்சை, தமிழ் பல்கலையின் அனுமதி பெற்று, சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், ஒருங்கிணைந்த எம்.ஏ., தமிழ் பட்ட மேற்படிப்பு வழங்கப்படுகிறது.இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது; 15 மாணவர்களுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித் தொகை உண்டு. இப்படிப்பிற்கு, பிளஸ் 2 மதிப்பெண் வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குள் www.ulakaththamizh.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த இந்த படிப்பை முடிக்கும் வரை, மாணவ - மாணவியருக்கு தனித்தனி இலவச விடுதி வசதியும் உண்டு.மேலும் விபரங்களுக்கு, &'இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2-ம் முதன்மை சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்னை -- 113&' என்ற முகவரியிலோ அல்லது 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்